சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

3. உண்மை பற்றிய கொள்கை முன்னுரை அளவை இயல் முறைப்படி சித்தாந்த சைவம் கொள்ளும் வரையறை 'மலைவின்மை' என்பதே. உலகியல் அனுபவத்தில் மலைவுடையன என்று கொள்ளப்பெறும் எந்த ஒன்றும் மலை வின்மை என்ற அடிப்படையில் இணைந்து நிற்கக் கூடியவைகளே என்ற கருத்தை வரையறை செய்துணர்த்திய சிவஞான முனிவர் மெய்ப்பொருளியலாளர் கொள்கைப்படி உண்மை பற்றிய வரை யறைவு கொண்ட கொள்கையை அடுத்த நிலையில் அமைத்துக் காட்டுகின்றார். 'உண்மை' என்றால் என்ன? உண் என்பது ஒத்திருப்பது என விளக்கம் கூறுவது ஒருவகை. ஒரு நிகழ்ச்சியைப் பலரும் ஆம் என ஒத்துக் கொள்ளும்போது அந்நிகழ்ச்சியானது உண்மை என்ற பேற்றைப் பெறுகிறது. உண்மை என்பது பயன் தருவது என்பது ஒரு கொள்கை. ஒரு ரூபாய் நாணயம் உண்மை என்றால் அதைக் கொடுத்து நான் விரும்பிய பயனைப் பெற முடியும். மெய்ப்பொருளியலில் 'உண்மை' பற்றிய கொள்கையைத் தத்துவவாதிகள் எடுத்துக்கூறி நிலை நாட்டுதல் உண்டு. அவ்வகை யில் உண்மை பற்றிய கொள்கையைச் சித்தாந்த சைவமும் கூறுதல் வேண்டும். ஆனால், சித்தாந்த சைவர்கள் பொதுவாக இக் கருத்தை யாரும் வரையறை செய்து காட்டவில்லை என்று கூறி விடுவார்கள்.
3. உண்மை பற்றிய கொள்கை முன்னுரை அளவை இயல் முறைப்படி சித்தாந்த சைவம் கொள்ளும் வரையறை ' மலைவின்மை ' என்பதே . உலகியல் அனுபவத்தில் மலைவுடையன என்று கொள்ளப்பெறும் எந்த ஒன்றும் மலை வின்மை என்ற அடிப்படையில் இணைந்து நிற்கக் கூடியவைகளே என்ற கருத்தை வரையறை செய்துணர்த்திய சிவஞான முனிவர் மெய்ப்பொருளியலாளர் கொள்கைப்படி உண்மை பற்றிய வரை யறைவு கொண்ட கொள்கையை அடுத்த நிலையில் அமைத்துக் காட்டுகின்றார் . ' உண்மை ' என்றால் என்ன ? உண் என்பது ஒத்திருப்பது என விளக்கம் கூறுவது ஒருவகை . ஒரு நிகழ்ச்சியைப் பலரும் ஆம் என ஒத்துக் கொள்ளும்போது அந்நிகழ்ச்சியானது உண்மை என்ற பேற்றைப் பெறுகிறது . உண்மை என்பது பயன் தருவது என்பது ஒரு கொள்கை . ஒரு ரூபாய் நாணயம் உண்மை என்றால் அதைக் கொடுத்து நான் விரும்பிய பயனைப் பெற முடியும் . மெய்ப்பொருளியலில் ' உண்மை ' பற்றிய கொள்கையைத் தத்துவவாதிகள் எடுத்துக்கூறி நிலை நாட்டுதல் உண்டு . அவ்வகை யில் உண்மை பற்றிய கொள்கையைச் சித்தாந்த சைவமும் கூறுதல் வேண்டும் . ஆனால் சித்தாந்த சைவர்கள் பொதுவாக இக் கருத்தை யாரும் வரையறை செய்து காட்டவில்லை என்று கூறி விடுவார்கள் .