சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

உண்மை பற்றிய கொள்கை முறையாக நிறுவப்பெற்ற எந்த ஒரு மெய்ப் பொருளியற் கொள்கையும் உண்மை பற்றிய கொள்கையையும் பிழை எதனால் உண்டாகிறது என்பது பற்றிய கொள்கையையும் விளக்குவது அறிவாராய்ச்சி இயலில் எதிர்பார்க்கப் பெறும் செய்திகள். அவ் வகையில் சித்தாந்த சைவத்தின் உண்மை பற்றிய கொள்கையை மெய்கண்டார் அமைத்துக் காட்டியுள்ளார். மெய்கண்டாரின் வழி நின்று அக்கொள்கையை வரையறை செய்தமைத்துக் காட்டு கின்றார் சிவஞான முனிவர். 17 சிவஞான முனிவரால் வரையறை செய்தமைத்துக் காட்டும் உண்மைபற்றிய கொள்கையானது மெய்ப் பொருளியலுலகில் புதுமையும் நிறைவும் கொண்ட ஒன்றாக அமைக்கப்பெறும் இயல் புடையது என்பதை உணரும்போது சிவஞான முனிவரின் சைவ சித்தாந்தத் தொண்டு காலத்தோடும் கருத்தோடும் குறை நீக்கி நிறைவுடையதாக அமைத்த நற்றொண்டு எனக் கொள்ளுதல் வேண்டும். உண்மையின் இயல்பு பற்றிய ஆய்வை நாம் சிவஞான சித்தி யாரில் காணலாம். "சொல்லப்பெறும் சமயங்களும், உண்மைப் பொருளை இது என உணர்வதற்குக் கருவியாகிய நூல்களும் மாறுபட்டனவாகப் பலவாக உள்ளன. இவற்றுள் முதன்மைச் சமயம் யாது, அச்சமயப் பொருளை உண்மையில் உணர்த்தும் நூல்தான் யாது என்னில் கருத்து வேறுபாடுகள் மலிந்துள்ளன. இது பொருந்தும் அது பொருந்தாது என்னும் பிணக்கின்றி முறைமையாக அவையனைத்தும் ஒருங்கே காணப்பெற நின்ற சமயம் எதுவோ அதுவே முதன்மைச் சமயம்; அச்சமயப் பொருளை உணர்த்தும் நூலே நூல் எனப்பெறும். அவ்வகையில் சித்தாந்த சைவமே சமயம், அதனாற் கொள்ளப் பெறும் நூல்களாகிய வேத நூல், சைவநூல் என்பவையே நூல்கள். அவையே அவ்விறைவன் திருவடியில் அடங்கி நின்று பொது நூலும் சிறப்பு நூலுமாய் அமையும். இதுவே, அருணந்தி சிவாசாரியார் வரையறை செய்யும் உண்மை பற்றிய கொள்கையின் ஆய்வு முறை. சை-2
உண்மை பற்றிய கொள்கை முறையாக நிறுவப்பெற்ற எந்த ஒரு மெய்ப் பொருளியற் கொள்கையும் உண்மை பற்றிய கொள்கையையும் பிழை எதனால் உண்டாகிறது என்பது பற்றிய கொள்கையையும் விளக்குவது அறிவாராய்ச்சி இயலில் எதிர்பார்க்கப் பெறும் செய்திகள் . அவ் வகையில் சித்தாந்த சைவத்தின் உண்மை பற்றிய கொள்கையை மெய்கண்டார் அமைத்துக் காட்டியுள்ளார் . மெய்கண்டாரின் வழி நின்று அக்கொள்கையை வரையறை செய்தமைத்துக் காட்டு கின்றார் சிவஞான முனிவர் . 17 சிவஞான முனிவரால் வரையறை செய்தமைத்துக் காட்டும் உண்மைபற்றிய கொள்கையானது மெய்ப் பொருளியலுலகில் புதுமையும் நிறைவும் கொண்ட ஒன்றாக அமைக்கப்பெறும் இயல் புடையது என்பதை உணரும்போது சிவஞான முனிவரின் சைவ சித்தாந்தத் தொண்டு காலத்தோடும் கருத்தோடும் குறை நீக்கி நிறைவுடையதாக அமைத்த நற்றொண்டு எனக் கொள்ளுதல் வேண்டும் . உண்மையின் இயல்பு பற்றிய ஆய்வை நாம் சிவஞான சித்தி யாரில் காணலாம் . சொல்லப்பெறும் சமயங்களும் உண்மைப் பொருளை இது என உணர்வதற்குக் கருவியாகிய நூல்களும் மாறுபட்டனவாகப் பலவாக உள்ளன . இவற்றுள் முதன்மைச் சமயம் யாது அச்சமயப் பொருளை உண்மையில் உணர்த்தும் நூல்தான் யாது என்னில் கருத்து வேறுபாடுகள் மலிந்துள்ளன . இது பொருந்தும் அது பொருந்தாது என்னும் பிணக்கின்றி முறைமையாக அவையனைத்தும் ஒருங்கே காணப்பெற நின்ற சமயம் எதுவோ அதுவே முதன்மைச் சமயம் ; அச்சமயப் பொருளை உணர்த்தும் நூலே நூல் எனப்பெறும் . அவ்வகையில் சித்தாந்த சைவமே சமயம் அதனாற் கொள்ளப் பெறும் நூல்களாகிய வேத நூல் சைவநூல் என்பவையே நூல்கள் . அவையே அவ்விறைவன் திருவடியில் அடங்கி நின்று பொது நூலும் சிறப்பு நூலுமாய் அமையும் . இதுவே அருணந்தி சிவாசாரியார் வரையறை செய்யும் உண்மை பற்றிய கொள்கையின் ஆய்வு முறை . சை -2