சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

18 சிவஞான முனிவர் நோக்கில் சைவசித்தாந்தம் "ஓது சமயங்கள் பொருள் உணரும் நூல்கள் ஒன்றோடு ஒன்று ஒவ்வாமல் உள பலவும்; இவற்றுள் யாது சமயம் பொருள்நூல் யாது இங்கு என்னில் இது ஆகும் அது அல்லது எனும் பிணக்கது இன்றி நீதியினால் இவையெல்லாம் ஓரிடத்தே காண நின்றது யாதொரு சமயம் அதுசமயம், பொருள்நூல் ஆதலினால் இவையெல்லாம் அருமறை ஆகமத்தே அடங்கியிடும்; அவையிரண்டும் அரனடிக்கீழ் அடங்கும்" என்பது சிவஞான சித்தியார், சுபக்கம் எட்டாம் சூத்திரம் 13ஆம் பாட்டு. உண்மை பற்றிய கொள்கையை வரையறை செய்யும் வகை யில் சிவஞான முனிவர் வேறொரு எடுத்துக்காட்டை அமைத்துக் காட்டுகின்றார். யானையின் இயல்பைக் கண்ணால் கண்டு தெளிதல் வேண்டும். கண் இல்லையானால் கைகளால் அதன் பல்வேறு உறுப்புக்களைத் தடவிப் பார்த்து, யானையின் இயல்பு இது என உணரப் புகுந் தால், அவர் எல்லாரும் யானையின் ஒவ்வோர் இயல்பையே உணர்ந்து, அதன் முழுமையை உணராதவர் ஆவார். அவர் கூறுவன அனைத்தும் ஒன்றோடொன்று முரணுவன ஆயினும், கண் பெற்றோன் ஒருவனுக்கு அவையாவும் யானையின் ஒருபுடை இயல்புகளாய் அறியப்பெறும். அவ்வாறே எந்த ஒரு பொருளை யும் முழுமையாக உணரும் கருவி கொண்டு முழுமையை உணர்தல் வேண்டும். அவ்வாறின்றி, ஏகதேச இயல்பை அறிதல் முழுமையை அறிதல் ஆகாது. பகுதிகளை அறிவதன் மூலம் முழுமையை ஆராய்ச்சி முறையில் அறிதல் அமையாது. அவை ஒன்றோ டொன்று முரணியும் நிற்கும். அவ்வாறே முதல்வன் இயல்பை அவன் அருளையே கண்ணாகக் கொண்டு உணர்தல் வேண்டும். அருட்கண் பெறாதார் ஆராய்ச்சி அறிவால் உரைப்பன எல்லாம் முதல்வனது ஒவ்வோரியல்பு பற்றிய ஏகதேச உணர்வாகவே அமையும்; முழுமை இயல்பு பற்றிய உணர்வாக அமையாது, அவ்வாறு கூறப்பெற்றவையெல்லாம் அருட்கண் பெற்றபோது, முழுமையின் கூறுகள் எனத் தெளிவாய் உணரப் பெறும். எனவே, முழுமையை உணரும் கருவி கொண்டு, முழுமையை உணர்தலே உண்மை ஆகும். இது சிவஞானமுனிவர் அமைத்துக் காட்டும் உண்மை பற்றிய கொள்கை.
18 சிவஞான முனிவர் நோக்கில் சைவசித்தாந்தம் ஓது சமயங்கள் பொருள் உணரும் நூல்கள் ஒன்றோடு ஒன்று ஒவ்வாமல் உள பலவும் ; இவற்றுள் யாது சமயம் பொருள்நூல் யாது இங்கு என்னில் இது ஆகும் அது அல்லது எனும் பிணக்கது இன்றி நீதியினால் இவையெல்லாம் ஓரிடத்தே காண நின்றது யாதொரு சமயம் அதுசமயம் பொருள்நூல் ஆதலினால் இவையெல்லாம் அருமறை ஆகமத்தே அடங்கியிடும் ; அவையிரண்டும் அரனடிக்கீழ் அடங்கும் என்பது சிவஞான சித்தியார் சுபக்கம் எட்டாம் சூத்திரம் 13 ஆம் பாட்டு . உண்மை பற்றிய கொள்கையை வரையறை செய்யும் வகை யில் சிவஞான முனிவர் வேறொரு எடுத்துக்காட்டை அமைத்துக் காட்டுகின்றார் . யானையின் இயல்பைக் கண்ணால் கண்டு தெளிதல் வேண்டும் . கண் இல்லையானால் கைகளால் அதன் பல்வேறு உறுப்புக்களைத் தடவிப் பார்த்து யானையின் இயல்பு இது என உணரப் புகுந் தால் அவர் எல்லாரும் யானையின் ஒவ்வோர் இயல்பையே உணர்ந்து அதன் முழுமையை உணராதவர் ஆவார் . அவர் கூறுவன அனைத்தும் ஒன்றோடொன்று முரணுவன ஆயினும் கண் பெற்றோன் ஒருவனுக்கு அவையாவும் யானையின் ஒருபுடை இயல்புகளாய் அறியப்பெறும் . அவ்வாறே எந்த ஒரு பொருளை யும் முழுமையாக உணரும் கருவி கொண்டு முழுமையை உணர்தல் வேண்டும் . அவ்வாறின்றி ஏகதேச இயல்பை அறிதல் முழுமையை அறிதல் ஆகாது . பகுதிகளை அறிவதன் மூலம் முழுமையை ஆராய்ச்சி முறையில் அறிதல் அமையாது . அவை ஒன்றோ டொன்று முரணியும் நிற்கும் . அவ்வாறே முதல்வன் இயல்பை அவன் அருளையே கண்ணாகக் கொண்டு உணர்தல் வேண்டும் . அருட்கண் பெறாதார் ஆராய்ச்சி அறிவால் உரைப்பன எல்லாம் முதல்வனது ஒவ்வோரியல்பு பற்றிய ஏகதேச உணர்வாகவே அமையும் ; முழுமை இயல்பு பற்றிய உணர்வாக அமையாது அவ்வாறு கூறப்பெற்றவையெல்லாம் அருட்கண் பெற்றபோது முழுமையின் கூறுகள் எனத் தெளிவாய் உணரப் பெறும் . எனவே முழுமையை உணரும் கருவி கொண்டு முழுமையை உணர்தலே உண்மை ஆகும் . இது சிவஞானமுனிவர் அமைத்துக் காட்டும் உண்மை பற்றிய கொள்கை .