சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

உண்மை பற்றிய கொள்கை இருமை என நின்றவை அனைத்தும் மெய்மைகளே. என நின்றதே உண்மை. . 21 ஒருமை இரண்டு என நிறுத்தி அறியப் பெற்ற எல்லாம் ஒன்றுடன் ஒன்று முரண்பட்ட மெய்மை நிலைகளே. நன்மை தீமை, இரவு பகல், இறப்பு பிறப்பு, நினைப்பு மறப்பு, இம்மை அம்மை, ஆண்மை பெண்மை ஆகிய அனைத்தும் இருமை நிலைகளைக் கொண்ட மெய்மைகளே. ஒப்புமையுடைய முரண்பாடுகள். ஒன்றுடன் ஒன்று எதிர்மறை எனநின்ற இருமெய்மை நிலைகள். உண்மை என்றது எதிர்மறை அற்ற ஒருமை. இருப்பது என்பதற்கு எதிர்மறை இல்லை. உள்ளது என்பது எதிர்மறை யற்றது. இருமை என நின்ற முரண் நிலைகள் பொய்மை எனக் கொள்ளலாகாது. இரண்டும் மெய்மை நிலைகளே. இருமை நிலையினை உணர்த்தி, இருமையைக் கடந்த ஒருமை என நின்றதே உண்மை. இருமையின் இடையில்தான் உண்மை தோற்றம் பெறும். உண்மைக்குத்தனித்த தாங்கும் இடம் இல்லை. இருமையின் இடையில் இருமையைக் கடந்த ஒருமையானது பெருமை பெற்றுத் திகழும் என்பது பொருள். முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்ற நான்கற்கும் தனித் தனி நிலங்கள் உண்டு. பாலை என்பது நடுநிலைத் திணை எனப் பெறும். அதற்குத் தனி நிலம் முல்லை. இருநிலங்களின் இடையில் பாலை நடுநிலைத்திணையாக இருக்கும் என்பதுவிளக்கப்பெற்றது. உண்மை என்பதன் இயல்பை-உணர்த்த வந்த தொல்காப்பியம் 'ஒன்றே வேறே என்று இருபால் வயின் ஒன்றி உயர்ந்த பால்” என இலக்கணங் காட்டி விளக்கியதையும் இணைத்துக் காண வேண்டும் திருக்குறளில் நீத்தார் என்பார் இருமையைக் கடந்தார் என்று விளக்கம் காட்டப் பெற்றார். அவ்வாறே திருத்தொண்டர் புராணத்தில் 'புனிதர்' என்பார். யார் என விளக்கும் வகையில் இறைவன் வாக்காகவே அமைந்த திருப்பாட்டாகிய "பெருமையால் தம்மை ஒப்பார் பேணலால் எம்மைப்பெற்றார் ஒருமையால் உலகை வெல்வார் ஊனம்மேல் ஒன்றும் இல்லார் அருமையாம் நிலையில் நின்றார் அன்பினால் இன்பம் ஆர்வார் இருமையும் கடந்து நின்றார்"
உண்மை பற்றிய கொள்கை இருமை என நின்றவை அனைத்தும் மெய்மைகளே . என நின்றதே உண்மை . . 21 ஒருமை இரண்டு என நிறுத்தி அறியப் பெற்ற எல்லாம் ஒன்றுடன் ஒன்று முரண்பட்ட மெய்மை நிலைகளே . நன்மை தீமை இரவு பகல் இறப்பு பிறப்பு நினைப்பு மறப்பு இம்மை அம்மை ஆண்மை பெண்மை ஆகிய அனைத்தும் இருமை நிலைகளைக் கொண்ட மெய்மைகளே . ஒப்புமையுடைய முரண்பாடுகள் . ஒன்றுடன் ஒன்று எதிர்மறை எனநின்ற இருமெய்மை நிலைகள் . உண்மை என்றது எதிர்மறை அற்ற ஒருமை . இருப்பது என்பதற்கு எதிர்மறை இல்லை . உள்ளது என்பது எதிர்மறை யற்றது . இருமை என நின்ற முரண் நிலைகள் பொய்மை எனக் கொள்ளலாகாது . இரண்டும் மெய்மை நிலைகளே . இருமை நிலையினை உணர்த்தி இருமையைக் கடந்த ஒருமை என நின்றதே உண்மை . இருமையின் இடையில்தான் உண்மை தோற்றம் பெறும் . உண்மைக்குத்தனித்த தாங்கும் இடம் இல்லை . இருமையின் இடையில் இருமையைக் கடந்த ஒருமையானது பெருமை பெற்றுத் திகழும் என்பது பொருள் . முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என்ற நான்கற்கும் தனித் தனி நிலங்கள் உண்டு . பாலை என்பது நடுநிலைத் திணை எனப் பெறும் . அதற்குத் தனி நிலம் முல்லை . இருநிலங்களின் இடையில் பாலை நடுநிலைத்திணையாக இருக்கும் என்பதுவிளக்கப்பெற்றது . உண்மை என்பதன் இயல்பை - உணர்த்த வந்த தொல்காப்பியம் ' ஒன்றே வேறே என்று இருபால் வயின் ஒன்றி உயர்ந்த பால் என இலக்கணங் காட்டி விளக்கியதையும் இணைத்துக் காண வேண்டும் திருக்குறளில் நீத்தார் என்பார் இருமையைக் கடந்தார் என்று விளக்கம் காட்டப் பெற்றார் . அவ்வாறே திருத்தொண்டர் புராணத்தில் ' புனிதர் ' என்பார் . யார் என விளக்கும் வகையில் இறைவன் வாக்காகவே அமைந்த திருப்பாட்டாகிய பெருமையால் தம்மை ஒப்பார் பேணலால் எம்மைப்பெற்றார் ஒருமையால் உலகை வெல்வார் ஊனம்மேல் ஒன்றும் இல்லார் அருமையாம் நிலையில் நின்றார் அன்பினால் இன்பம் ஆர்வார் இருமையும் கடந்து நின்றார்