சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

சிவஞான முனிவர் நோக்கில் சைவசித்தாந்தம் என்பதனுள் இருமையும் கடந்து நின்றார் எனவும் ஒருமையால் உலகை வெல்வார் எனவும் ஊனம் மேல் ஒன்றும் இல்லார் எனவும் வரும் திருவாக்குக்களின் பொருளை ஓர்ந்து உணர்தல் வேண்டும். 22 மேலும், பெரிய புராணத்தில் புனிதர் எனப்பெறும் திருத் தொண்டர்களின் இலக்கணம் கூறுமிடத்தில், "கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார் ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்" என உணர்த்திய இலக்கணத்தை ஓர்ந்துணர்தல் வேண்டும். கேடும் ஆக்கமும் முரண்படும் எதிர்நிலைகள். இரண்டையும் கடந்த ஒன்றே, இருமையற்ற ஒருமை என்னும் புனிதம் ஆகும் அற்புதத் திரு என்றும் விளக்கம் செய்யப் பெற்றது. இனி, எண்ணுப் பெயர்களில் அமைத்துக் கூறும் போது, ஒன்று, பத்து என்ற இருநிலைகளுக்கு இடைநின்று இரண்டைடயும் கடந்து நின்ற தொன்மை நிலையாம் தொன்பதம், ஒன்பது என் பதை 'உண்மை' என்பதன் உரு எனக் கொண்டு "ஒன்பதாகிய உருவுடைப் பெருமான்" என வள்ளற்பெருமான் இலக்கணம் கூறினார். இருமையின் இடைநின்று, இருமையைக் கடந்த 'உண்மை' என்பதை அளவை நெறியின் அடிப்படையில் உணர்த்த வந்த இராமலிங்கர் "மருவி உயர்ந்தது உத்தரம் மறுத்துக் கடந்தது சுத்தம்" என வரையறை செய்து உணர்த்திய திறத்தையும் கண்டு தெளிதல் வேண்டும். மேலே கூறப்பெற்ற மரபு வழிவந்த விளக்கங்களின் அடிப் படையில் மெய்மை வேறு உண்மை வேறு எனக் கொண்டு மெய்மை என்பது இருமை முரண்களை உடையது எனவும் உண்மை என்பது எதிர்மறை அற்ற ஒருமை அல்லது இருமையின் இடைநின்று மேல் உயர்ந்த ஒருமை எனவும் விளக்கம் அமைத்துக் காண வேண்டும். அவ்வகையில் 'உண்மை' என்பது பற்றிய சித்தாந்தக் கொள்கையை விளக்கும் வகையில், மெய்கண்டார் அருளிய அவையடக்கப் பாடலுக்குச் சிவஞானமுனிவர் விளக்கம் அமைத்துக் காட்டுகின்றார்.
சிவஞான முனிவர் நோக்கில் சைவசித்தாந்தம் என்பதனுள் இருமையும் கடந்து நின்றார் எனவும் ஒருமையால் உலகை வெல்வார் எனவும் ஊனம் மேல் ஒன்றும் இல்லார் எனவும் வரும் திருவாக்குக்களின் பொருளை ஓர்ந்து உணர்தல் வேண்டும் . 22 மேலும் பெரிய புராணத்தில் புனிதர் எனப்பெறும் திருத் தொண்டர்களின் இலக்கணம் கூறுமிடத்தில் கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார் ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார் என உணர்த்திய இலக்கணத்தை ஓர்ந்துணர்தல் வேண்டும் . கேடும் ஆக்கமும் முரண்படும் எதிர்நிலைகள் . இரண்டையும் கடந்த ஒன்றே இருமையற்ற ஒருமை என்னும் புனிதம் ஆகும் அற்புதத் திரு என்றும் விளக்கம் செய்யப் பெற்றது . இனி எண்ணுப் பெயர்களில் அமைத்துக் கூறும் போது ஒன்று பத்து என்ற இருநிலைகளுக்கு இடைநின்று இரண்டைடயும் கடந்து நின்ற தொன்மை நிலையாம் தொன்பதம் ஒன்பது என் பதை ' உண்மை ' என்பதன் உரு எனக் கொண்டு ஒன்பதாகிய உருவுடைப் பெருமான் என வள்ளற்பெருமான் இலக்கணம் கூறினார் . இருமையின் இடைநின்று இருமையைக் கடந்த ' உண்மை ' என்பதை அளவை நெறியின் அடிப்படையில் உணர்த்த வந்த இராமலிங்கர் மருவி உயர்ந்தது உத்தரம் மறுத்துக் கடந்தது சுத்தம் என வரையறை செய்து உணர்த்திய திறத்தையும் கண்டு தெளிதல் வேண்டும் . மேலே கூறப்பெற்ற மரபு வழிவந்த விளக்கங்களின் அடிப் படையில் மெய்மை வேறு உண்மை வேறு எனக் கொண்டு மெய்மை என்பது இருமை முரண்களை உடையது எனவும் உண்மை என்பது எதிர்மறை அற்ற ஒருமை அல்லது இருமையின் இடைநின்று மேல் உயர்ந்த ஒருமை எனவும் விளக்கம் அமைத்துக் காண வேண்டும் . அவ்வகையில் ' உண்மை ' என்பது பற்றிய சித்தாந்தக் கொள்கையை விளக்கும் வகையில் மெய்கண்டார் அருளிய அவையடக்கப் பாடலுக்குச் சிவஞானமுனிவர் விளக்கம் அமைத்துக் காட்டுகின்றார் .