சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

சிவஞான முனிவரின் நட்பியலுரை போன்ற வடமொழிநூல்கள் ஆகியவைகளில் உள்ள சுலோகங் களாக அறுபதை எடுத்துக் காட்டி, அவைகள் சிவபரத்துவமே கூறு கின்றன என்ற வகையில் சிவதத்துவ விவேகம் என்னும் நூலை அமைத்தார் அப்பைய தீட்சிதர். 29 'சிவபரத்வம்' என்ற பொருளை நேராகக் கொள்ளவில்லை யென்றாலும், அதை உணர்த்துவதோடு, சிவனுடைய மேலாந் தன்மையை உணர்த்தும் உபநிடதப்பொருளை அப்பைய தீட்சிதர் எடுத்து வழங்காதிருப்பது சுவாமிகளுக்குத் தெளிவாகத் தெரி கிறது. அந்த மூன்றையும் எடுத்துக் கூறுதல் வேண்டும் என்பது சுவாமிகளின் அவா. அந்த மூன்றும் உபநிடதவாக்கியங்கள். ஆகையினாலே, அப்பையதீட்சிதர் எடுத்து நிறுத்திய ஸ்மிருதி, புராணச் சான்றுகளுக்கு முன்னர் வைத்துக் காட்ட வேண்டும் என்பது சுவாமிகளின் கருத்தன்று, முன்னர் வைக்க வேண்டிய முறை உபநிடதங்கள் சுருதியோடு இணைந்தவை; ஸ்மிருதிகள் அவைகளுக்குப் பிற்பட்டவை, என்ற வரலாற்றுமுறையும் மரபு முறையுமே காரணம். அதனை, மெய்கண்டாரின் சிவஞான போதத்து ஐந்தாம் நூற்பாவில் அமைந்த இரண்டு அதிகரணத்துள் இரண்டாம் அதிகரணத்தின் கீழ் அமைந்த மூன்று வெண்பாக் களுள் முதல்வெண்பாவின் விளக்கமாக அமைத்துக் காட்டுவதை இங்கே காணலாம். "மன்னுசிவன் சன்னிதியின் மற்றுலகம் சேட்டித்தது என்னும் மறையின் இயல் மறந்தாய்-சொன்னசிவன் கண்ணா உளம் வினையால் கண்டறிந்து நிற்குங்காண் எண்ணான்சிவன் அசத்தை இன்று” என்ற வெண்பாவில் இரண்டாம் வரியில் வருகின்ற மறையின் இயல் மறந்தாய் என்பதன் மூலம் அமைத்துக் காட்டப்பெறும் உபநிடதப் பகுதிகள் இவை இவை எனக் கொள்ளும் நிலையில் அவைகளைக் கொண்டுவந்து இணைத்துக் காட்டி, ‘“ஈண்டுக் காட்டிய அநுமான அளவையேயன்றி” முதல்வன் 'சன்னிதியில் உயிர் சேட்டிக்கும் “என்னும் ஆகம அளவையும் உண்மையின், அதனை மறந்து, முதல்வனாலன்றியும் உயிர்கள். தாமே உணரும் என முரணிக்கூறுதல் சாலா தென்பார், மன்னு சிவன் சன்னிதியின் உயிர் சேட்டித்தது என்னும் மறையின் இயல் மறந்தாய் என்றும்,"
சிவஞான முனிவரின் நட்பியலுரை போன்ற வடமொழிநூல்கள் ஆகியவைகளில் உள்ள சுலோகங் களாக அறுபதை எடுத்துக் காட்டி அவைகள் சிவபரத்துவமே கூறு கின்றன என்ற வகையில் சிவதத்துவ விவேகம் என்னும் நூலை அமைத்தார் அப்பைய தீட்சிதர் . 29 ' சிவபரத்வம் ' என்ற பொருளை நேராகக் கொள்ளவில்லை யென்றாலும் அதை உணர்த்துவதோடு சிவனுடைய மேலாந் தன்மையை உணர்த்தும் உபநிடதப்பொருளை அப்பைய தீட்சிதர் எடுத்து வழங்காதிருப்பது சுவாமிகளுக்குத் தெளிவாகத் தெரி கிறது . அந்த மூன்றையும் எடுத்துக் கூறுதல் வேண்டும் என்பது சுவாமிகளின் அவா . அந்த மூன்றும் உபநிடதவாக்கியங்கள் . ஆகையினாலே அப்பையதீட்சிதர் எடுத்து நிறுத்திய ஸ்மிருதி புராணச் சான்றுகளுக்கு முன்னர் வைத்துக் காட்ட வேண்டும் என்பது சுவாமிகளின் கருத்தன்று முன்னர் வைக்க வேண்டிய முறை உபநிடதங்கள் சுருதியோடு இணைந்தவை ; ஸ்மிருதிகள் அவைகளுக்குப் பிற்பட்டவை என்ற வரலாற்றுமுறையும் மரபு முறையுமே காரணம் . அதனை மெய்கண்டாரின் சிவஞான போதத்து ஐந்தாம் நூற்பாவில் அமைந்த இரண்டு அதிகரணத்துள் இரண்டாம் அதிகரணத்தின் கீழ் அமைந்த மூன்று வெண்பாக் களுள் முதல்வெண்பாவின் விளக்கமாக அமைத்துக் காட்டுவதை இங்கே காணலாம் . மன்னுசிவன் சன்னிதியின் மற்றுலகம் சேட்டித்தது என்னும் மறையின் இயல் மறந்தாய் - சொன்னசிவன் கண்ணா உளம் வினையால் கண்டறிந்து நிற்குங்காண் எண்ணான்சிவன் அசத்தை இன்று என்ற வெண்பாவில் இரண்டாம் வரியில் வருகின்ற மறையின் இயல் மறந்தாய் என்பதன் மூலம் அமைத்துக் காட்டப்பெறும் உபநிடதப் பகுதிகள் இவை இவை எனக் கொள்ளும் நிலையில் அவைகளைக் கொண்டுவந்து இணைத்துக் காட்டி ஈண்டுக் காட்டிய அநுமான அளவையேயன்றி முதல்வன் ' சன்னிதியில் உயிர் சேட்டிக்கும் என்னும் ஆகம அளவையும் உண்மையின் அதனை மறந்து முதல்வனாலன்றியும் உயிர்கள் . தாமே உணரும் என முரணிக்கூறுதல் சாலா தென்பார் மன்னு சிவன் சன்னிதியின் உயிர் சேட்டித்தது என்னும் மறையின் இயல் மறந்தாய் என்றும்