சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

முன்னுரை உலகத் தமிழ்க்கல்வி இயக்கத்தால் நிறுவப்பெற்ற சிவஞான முனிவர் அறக்கட்டளையின் சார்பில் நிகழ்த்தப்பெற்ற சொற் பொழிவின் வரிவடிவம் இது. 'இருமையின் ஒருமையும் ஒருமையின் பெருமையும்" என்ற அளவையியல் உரையின் மூலம் 'உண்மைப்பொருள்' பற்றிய தமிழ கத்தின் கொள்கையை உலகத் தத்துவ அரங்குக்கு வழங்கிய திருஞானசம்பந்தர் வழியில் நின்று, ஒன்றும் இரண்டும் என (12), ஆய்தம் என (ஃ) நின்ற தமிழகத்து அருளாளர்தம் கொள்கை களைச் சிவஞானபோதம் என்ற நூலாக அமைத்த மெய்கண்டார் வழிநின்று, மாதவச் சிவஞான சுவாமிகள் அமைத்துத்தந்த சித்தாந்த சைவத்தின் உலகளாவிய பொதுமை நெறிகள் ஐந்தனைக் கொண்டதாக இந்நூலின் பொருண்மை அமைகிறது. 66 சித்தாந்த சைவமானது ஒரு கட்டுக் கோப்பான தத்துவக் கொள்கையே என்பதை நிறுவுவதற்கு, அது சில கூறுகள் கொண்ட தாக இல்லை எனக் கூறும் குறையை நீக்குமுகத்தான் ஐந்து கொள்கைகளை விளக்கும் முறையில் அமைந்ததே இந்நூல். இவ்வைந்தும் சிவஞானமுனிவர்தம் கைவண்ணத்தாலேயே மலர்ந் தவையாதலின் இந்நூற்யெர் சிவஞானமுனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம் என அமைவதாயிற்று. இது தத்துவ இயலாளர்களுக் காகவே அமைக்கப் பெற்ற நூல். உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் ச.வே.சுப்பிரமணியம் அவர்கள் என்னை உலகத்தமிழ்க் கல்வி இயக்கத்தாருக்குப் பரிந்துரை செய்து, இப்பணியில் ஈடுபடுத்தினார் கள். டாக்டர் ச.வே.சு.அவர்கள் உழைப்பின் மறுஉருவம். உழைப்பு வேறு; அவர்வேறு அன்று. இன்றும் உலகில் உழைப்பாளி கள் பலர் உண்டு. உழைப்பவர் உண்டு தான்; பிறரையும் தம்மைப் போலவே உழைக்க வைப்பார் இல்லை. கடந்த இருபத்தெட் டாண்டுக் காலமாக என்னை முறையுற உழைக்குமாறும் செய்து வருகிறார். உழைக்கலாம்; உழைக்க வைக்கலாம். ஆனால், குறிப் பிட்ட காலத்தில்முடியுமாறு உழைக்கவேண்டும் என்பதும்அவர்தம்
முன்னுரை உலகத் தமிழ்க்கல்வி இயக்கத்தால் நிறுவப்பெற்ற சிவஞான முனிவர் அறக்கட்டளையின் சார்பில் நிகழ்த்தப்பெற்ற சொற் பொழிவின் வரிவடிவம் இது . ' இருமையின் ஒருமையும் ஒருமையின் பெருமையும் என்ற அளவையியல் உரையின் மூலம் ' உண்மைப்பொருள் ' பற்றிய தமிழ கத்தின் கொள்கையை உலகத் தத்துவ அரங்குக்கு வழங்கிய திருஞானசம்பந்தர் வழியில் நின்று ஒன்றும் இரண்டும் என ( 12 ) ஆய்தம் என ( ) நின்ற தமிழகத்து அருளாளர்தம் கொள்கை களைச் சிவஞானபோதம் என்ற நூலாக அமைத்த மெய்கண்டார் வழிநின்று மாதவச் சிவஞான சுவாமிகள் அமைத்துத்தந்த சித்தாந்த சைவத்தின் உலகளாவிய பொதுமை நெறிகள் ஐந்தனைக் கொண்டதாக இந்நூலின் பொருண்மை அமைகிறது . 66 சித்தாந்த சைவமானது ஒரு கட்டுக் கோப்பான தத்துவக் கொள்கையே என்பதை நிறுவுவதற்கு அது சில கூறுகள் கொண்ட தாக இல்லை எனக் கூறும் குறையை நீக்குமுகத்தான் ஐந்து கொள்கைகளை விளக்கும் முறையில் அமைந்ததே இந்நூல் . இவ்வைந்தும் சிவஞானமுனிவர்தம் கைவண்ணத்தாலேயே மலர்ந் தவையாதலின் இந்நூற்யெர் சிவஞானமுனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம் என அமைவதாயிற்று . இது தத்துவ இயலாளர்களுக் காகவே அமைக்கப் பெற்ற நூல் . உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் ச.வே.சுப்பிரமணியம் அவர்கள் என்னை உலகத்தமிழ்க் கல்வி இயக்கத்தாருக்குப் பரிந்துரை செய்து இப்பணியில் ஈடுபடுத்தினார் கள் . டாக்டர் ச.வே.சு.அவர்கள் உழைப்பின் மறுஉருவம் . உழைப்பு வேறு ; அவர்வேறு அன்று . இன்றும் உலகில் உழைப்பாளி கள் பலர் உண்டு . உழைப்பவர் உண்டு தான் ; பிறரையும் தம்மைப் போலவே உழைக்க வைப்பார் இல்லை . கடந்த இருபத்தெட் டாண்டுக் காலமாக என்னை முறையுற உழைக்குமாறும் செய்து வருகிறார் . உழைக்கலாம் ; உழைக்க வைக்கலாம் . ஆனால் குறிப் பிட்ட காலத்தில்முடியுமாறு உழைக்கவேண்டும் என்பதும்அவர்தம்