சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

சிவஞான முனிவர் நோக்கில் சைவசித்தாந்தம் உடலை எடுத்துக் காட்டி, உடலின் வேறாய் நின்றதோர் உயிர் உண்டு என்பதை மூன்றாம் நூற்பாவின் பொருளாக்கி, 32 இடைநின்ற இரண்டாம் நூற்பாவினால் இவ்விரண்டு நூற்பாப் பொருள்களையும் கடந்து நின்ற பொருளை எடுத்துக் கூறியும் இணைத்துக் காட்டியும் நிறைவுறுத்தினார் மெய்கண்டார். முதல் நூற்பாவை விட மூன்றாம் நூற்பாவானது, "மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா உளது'' என்பதை முன்னிறுத்தி ஆராய்கின்றது. உயிரும் உடலும் தம்முள் முரண்பட்டவை. முரண்பட்டவை களாயினும் அவை இரண்டும் ஒத்த மதிப்பீடு உடையவைகளே. என்றும், 'உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன் உடம்பின் உள்ளே உறுபொருள் கண்டேன்" ''உடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே" என்றும் திருமூலர் அருளியிருந்தாலும், உடலும் உயிரும் ஒத்த தகுதிப்பாடு உடையவைகளே என்பது எல்லாராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய எளிமையுடைய கருத்தன்று. டேக்கார்ட்டின் கொள்கை பிரெஞ்சு நாட்டுக் கணிதமேதை ஒருவர் தத்துவமேதையாக மலர்ந்தார். அவரே டேக்கார்ட். இக்கால ஐரோப்பிய நாட்டுத் தத்துவக் கொள்கைக்குத் தந்தை என்று தத்துவ உலகம் கொண் டாடும் மெய்ப் பொருளியலறிஞர். ஐயத்துக்கிடமின்றி என்னால் உண்டு என்று ஒத்துக் கொள்ளக் கூடிய பொருள் 'நானே' என்பது தான் அவர் ஆய்வின் முடிவு. "உள்ளுகின்றேன்; உள்ளுகின்ற நான் உள்ளவனே" என்பது அவர் அமைத்த முறை. ஆனால், அவர் அறிவித்த சிக்கல் ஒன்று. மனமும் (உயிர் என நாம் கருதும் பொருளை அவர் மனம் என்றார்.) உடலும் செயற்படும் முறைகளை ஆராய்ந்தார். உடலானது இடத்தை நிரப்பும் பருப்பொருள். மனம் பருப்பொருளன்று; சிந்தனையாற்றலுள்ள நுண்பொருள். தன்மையால் முற்றிலும் மாறுபட்ட இரண்டு பொருள்களுள்,
சிவஞான முனிவர் நோக்கில் சைவசித்தாந்தம் உடலை எடுத்துக் காட்டி உடலின் வேறாய் நின்றதோர் உயிர் உண்டு என்பதை மூன்றாம் நூற்பாவின் பொருளாக்கி 32 இடைநின்ற இரண்டாம் நூற்பாவினால் இவ்விரண்டு நூற்பாப் பொருள்களையும் கடந்து நின்ற பொருளை எடுத்துக் கூறியும் இணைத்துக் காட்டியும் நிறைவுறுத்தினார் மெய்கண்டார் . முதல் நூற்பாவை விட மூன்றாம் நூற்பாவானது மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா உளது ' ' என்பதை முன்னிறுத்தி ஆராய்கின்றது . உயிரும் உடலும் தம்முள் முரண்பட்டவை . முரண்பட்டவை களாயினும் அவை இரண்டும் ஒத்த மதிப்பீடு உடையவைகளே . என்றும் ' உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன் உடம்பின் உள்ளே உறுபொருள் கண்டேன் ' ' உடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே என்றும் திருமூலர் அருளியிருந்தாலும் உடலும் உயிரும் ஒத்த தகுதிப்பாடு உடையவைகளே என்பது எல்லாராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய எளிமையுடைய கருத்தன்று . டேக்கார்ட்டின் கொள்கை பிரெஞ்சு நாட்டுக் கணிதமேதை ஒருவர் தத்துவமேதையாக மலர்ந்தார் . அவரே டேக்கார்ட் . இக்கால ஐரோப்பிய நாட்டுத் தத்துவக் கொள்கைக்குத் தந்தை என்று தத்துவ உலகம் கொண் டாடும் மெய்ப் பொருளியலறிஞர் . ஐயத்துக்கிடமின்றி என்னால் உண்டு என்று ஒத்துக் கொள்ளக் கூடிய பொருள் ' நானே ' என்பது தான் அவர் ஆய்வின் முடிவு . உள்ளுகின்றேன் ; உள்ளுகின்ற நான் உள்ளவனே என்பது அவர் அமைத்த முறை . ஆனால் அவர் அறிவித்த சிக்கல் ஒன்று . மனமும் ( உயிர் என நாம் கருதும் பொருளை அவர் மனம் என்றார் . ) உடலும் செயற்படும் முறைகளை ஆராய்ந்தார் . உடலானது இடத்தை நிரப்பும் பருப்பொருள் . மனம் பருப்பொருளன்று ; சிந்தனையாற்றலுள்ள நுண்பொருள் . தன்மையால் முற்றிலும் மாறுபட்ட இரண்டு பொருள்களுள்