சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

+ 42 சிவஞான முனிவர்நோக்கில் சைவசித்தாந்தம் சோமேசா அறம், பொருள், இன்பம் என்னும் முக்கூற்று பொருண்மைத்தாம் திருக்குறளுக்கு வரலாற்று விளக்கம் அமைத் தார் என்பது வரலாறு. திருவள்ளுவரின் நிறைமொழியாம் திருக்குறள் மேற்பக்கம்; வரலாறு ஒன்றை அதை ஒத்த நிலையில் அமைத்து ஒரு குறட்பாவைப் போலவே கீழ்ப்பக்கம் அமைத்து நிறுத்துதல். மேல் உள்ளது ஒலி விளக்கம்; கீழே உள்ளது பொருள் விளக்கம் அல்லது வரலாற்று விளக்கம். இரண்டும் தனித்தனி நின்றால் இரட்டைக் குறள் வெண்பா. குறள் இரண்டு; ஒலியும் நிகழ்வுமாகிய செய்தி இரண்டு. இவ்வாறான இரட்டைகள் முற்றாக மாற்றம் பெற்று "வெண்பா" என்ற ஒன்றே மலர்கிறது. இத்தகைய ஒருமையை நல்கிய ஆற்றல் எதற்கு? ஒலியாய் நின்ற மொழியையும், வரலாறாக நின்ற மொழியையும் ஒன்றாக இணைத்து மாற்ற முறுத்திய பெருமை 'முதுமொழி' என்ற ஒன்றற்கே உண்டு என்றார். (ஸ + உமா + ஈசா = சோமேசா) இரண்டு குறள் வெண்பாக்களை இணைத்து நிறுத்தி ஒரு நேரிசை வெண்பாவாக அமைக்க வேண்டுமாயின் இடையே ‘ஆசு’ அமையும். ஆசு என்பது ஒற்றுமைப்படாத இருமைகளை இணைத்து நிறுத்தும் ஆற்றல் வாய்ந்த மொழியே ‘ஆசு’ என நின்று இணைப்பது. அவ்வாறே உமா- ஈசா என்ற இரண்டையும் இணைத்த சத்யமாக, இரண்டையும் கடந்த சத்யமாக நின்ற மொழியேமுதுமொழி. அதுவே 'சோமேசா' என்பது. இருமைகளை இணைத்த பெருமையுடைய சத்யம் என நின்ற மூன்றாம் நிலை; இரண்டையும் கடந்த முதுமை நிலை என்பதைக் குறிக்கும் முதுமொழி. உமா-ஈசா என்ற இருமையை இணைத்த இருமையைக் கடந்த ‘ச’ என்பதே முதுமை நிலையாயிற்று. எனவே, சோமேசர் முதுமொழி வெண்பா என்பதே ஒலியையும் பொருளையும்; ஒலியையும் வரலாற்று நிகழ்வையும் இணைத்து நிறுத்திக் கடந்த முதுமொழியாய் நின்ற ஒன்று உண்டு என்பதை யும்; அதுவே இருமைகளை இணைத்து நிறுத்துவது என்பதையும்; அதுவே இருமையை நோக்க முதுமையானது என்பதையும் உணர்ந்து தெளியும் வகையில் சோமேசர் முதுமொழி வெண்பாவை அமைத்தார்.
+ 42 சிவஞான முனிவர்நோக்கில் சைவசித்தாந்தம் சோமேசா அறம் பொருள் இன்பம் என்னும் முக்கூற்று பொருண்மைத்தாம் திருக்குறளுக்கு வரலாற்று விளக்கம் அமைத் தார் என்பது வரலாறு . திருவள்ளுவரின் நிறைமொழியாம் திருக்குறள் மேற்பக்கம் ; வரலாறு ஒன்றை அதை ஒத்த நிலையில் அமைத்து ஒரு குறட்பாவைப் போலவே கீழ்ப்பக்கம் அமைத்து நிறுத்துதல் . மேல் உள்ளது ஒலி விளக்கம் ; கீழே உள்ளது பொருள் விளக்கம் அல்லது வரலாற்று விளக்கம் . இரண்டும் தனித்தனி நின்றால் இரட்டைக் குறள் வெண்பா . குறள் இரண்டு ; ஒலியும் நிகழ்வுமாகிய செய்தி இரண்டு . இவ்வாறான இரட்டைகள் முற்றாக மாற்றம் பெற்று வெண்பா என்ற ஒன்றே மலர்கிறது . இத்தகைய ஒருமையை நல்கிய ஆற்றல் எதற்கு ? ஒலியாய் நின்ற மொழியையும் வரலாறாக நின்ற மொழியையும் ஒன்றாக இணைத்து மாற்ற முறுத்திய பெருமை ' முதுமொழி ' என்ற ஒன்றற்கே உண்டு என்றார் . ( + உமா + ஈசா = சோமேசா ) இரண்டு குறள் வெண்பாக்களை இணைத்து நிறுத்தி ஒரு நேரிசை வெண்பாவாக அமைக்க வேண்டுமாயின் இடையே ஆசு அமையும் . ஆசு என்பது ஒற்றுமைப்படாத இருமைகளை இணைத்து நிறுத்தும் ஆற்றல் வாய்ந்த மொழியே ஆசு என நின்று இணைப்பது . அவ்வாறே உமா- ஈசா என்ற இரண்டையும் இணைத்த சத்யமாக இரண்டையும் கடந்த சத்யமாக நின்ற மொழியேமுதுமொழி . அதுவே ' சோமேசா ' என்பது . இருமைகளை இணைத்த பெருமையுடைய சத்யம் என நின்ற மூன்றாம் நிலை ; இரண்டையும் கடந்த முதுமை நிலை என்பதைக் குறிக்கும் முதுமொழி . உமா - ஈசா என்ற இருமையை இணைத்த இருமையைக் கடந்த என்பதே முதுமை நிலையாயிற்று . எனவே சோமேசர் முதுமொழி வெண்பா என்பதே ஒலியையும் பொருளையும் ; ஒலியையும் வரலாற்று நிகழ்வையும் இணைத்து நிறுத்திக் கடந்த முதுமொழியாய் நின்ற ஒன்று உண்டு என்பதை யும் ; அதுவே இருமைகளை இணைத்து நிறுத்துவது என்பதையும் ; அதுவே இருமையை நோக்க முதுமையானது என்பதையும் உணர்ந்து தெளியும் வகையில் சோமேசர் முதுமொழி வெண்பாவை அமைத்தார் .