சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

54 சிவஞான முனிவர் நோக்கில் சைவசித்தாந்தம் இந்நூலின் தோற்றுவாயில் எடுத்துக் காட்டியது போல் பூர்வ பட்சம் செய்து சித்தாந்தம் செய்தல் எல்லாத் தத்துவக் கொள்கை களுக்கும் பொதுவான ஒன்றாக இருப்பவும், சித்தாந்தம் என்ப தையே இயற்பெயராகக் கொண்டு விளங்கும் இத்தத்துவக் கொள்கையின் உயிர் நாட்டம் எந்த இடத்தில் வேரூன்றி இருக் கிறது என்பதையும் நுனித்து நோக்குகின்றனர். இன்று வரையில் வேண்டுமானால் மறுக்கப் பெறாமல் இருக்கலாம். இனியும், என்றும் மறுக்கப் பெறா முடிவுகளே இவை என்று திண்ணமாக எப்படிக் கூறமுடியும் என்ற அடிப்படையில் ஆய்ந்து, இக்கொள்கை இன்றும், என்றும் சித்தாந்தமே என்று நிறுவிக் காட்டுதற்குரிய காரணத்தையும் மாதவச் சிவஞான சுவாமிகள் ஆய்ந்து தெளிந் திருத்தல் வேண்டும். மேலே எடுத்துக்காட்டப்பெற்ற குறிப்புக்களின் அடிப்படையில் மாபாடியத்தை வரையறைப் படுத்தி அமைத்ததோடு சிவதத்துவ விவேகத்தில் ஒரு குறிப்பையும் அருளியுள்ளார். சிவதத்துவ விவேகம் பற்றிய விளக்கம் முன்பேயும் காட்டப் பெற்றுள்ளது. சிவதத்துவ விவேகத்துள் முதல் நிலைப் பாயிரம் எனச் சிவஞானசுவாமிகள் தாம் அமைத்த ஏழு பாட்டுக்களில், ஏழாவது பாட்டில் நட்பியலுரை என்பதை அமைத்துக் காட்டியமை போன்றே அதற்கு முன்னின்ற ஆறாவது பாட்டில் முதல் வித்தை என்ற ஒன்றை எடுத்துக்காட்டி முதல்வித்தை உலகில் ஓங்கிச் சிறப்புற்று விளங்கவேண்டும் எனவும் வாழ்த்து அமைத்துக் கூறுவதாக அப்பகுதி அமைகிறது. சிவதத்துவ விவேகத்துள் சிவஞானசுவாமிகள் ஆறாவது பாட லிற்குறிப்பிட்டுக் காட்டும் முதல்வித்தை பற்றிய ஆய்வினைத் தன்னகத்துக் கொண்டு விளங்குவதே இப்பகுதி. வித்தை என்பதன் பொருள் வித்தை என்ற சொல் பொதுவாக ஞானம் என்பதைக் குறிக்கும். பரஞானம், அபரஞானம் என்பனவும் பரவித்தை அபர வித்தை எனக் குறிக்கப்பெறும் வழக்குண்மையைக் காணலாம். வித்தை என்பதை ஞானம் பெறுவதற்குரிய வழி என்ற வகை யிலும் எடுத்தாளும் நிலை உண்டு. வகரவித்தை எனவும் தகர வித்தை எனவும் வழங்குப. வகரத்தால் முடிக்கும் ஞானம் என்றும்
54 சிவஞான முனிவர் நோக்கில் சைவசித்தாந்தம் இந்நூலின் தோற்றுவாயில் எடுத்துக் காட்டியது போல் பூர்வ பட்சம் செய்து சித்தாந்தம் செய்தல் எல்லாத் தத்துவக் கொள்கை களுக்கும் பொதுவான ஒன்றாக இருப்பவும் சித்தாந்தம் என்ப தையே இயற்பெயராகக் கொண்டு விளங்கும் இத்தத்துவக் கொள்கையின் உயிர் நாட்டம் எந்த இடத்தில் வேரூன்றி இருக் கிறது என்பதையும் நுனித்து நோக்குகின்றனர் . இன்று வரையில் வேண்டுமானால் மறுக்கப் பெறாமல் இருக்கலாம் . இனியும் என்றும் மறுக்கப் பெறா முடிவுகளே இவை என்று திண்ணமாக எப்படிக் கூறமுடியும் என்ற அடிப்படையில் ஆய்ந்து இக்கொள்கை இன்றும் என்றும் சித்தாந்தமே என்று நிறுவிக் காட்டுதற்குரிய காரணத்தையும் மாதவச் சிவஞான சுவாமிகள் ஆய்ந்து தெளிந் திருத்தல் வேண்டும் . மேலே எடுத்துக்காட்டப்பெற்ற குறிப்புக்களின் அடிப்படையில் மாபாடியத்தை வரையறைப் படுத்தி அமைத்ததோடு சிவதத்துவ விவேகத்தில் ஒரு குறிப்பையும் அருளியுள்ளார் . சிவதத்துவ விவேகம் பற்றிய விளக்கம் முன்பேயும் காட்டப் பெற்றுள்ளது . சிவதத்துவ விவேகத்துள் முதல் நிலைப் பாயிரம் எனச் சிவஞானசுவாமிகள் தாம் அமைத்த ஏழு பாட்டுக்களில் ஏழாவது பாட்டில் நட்பியலுரை என்பதை அமைத்துக் காட்டியமை போன்றே அதற்கு முன்னின்ற ஆறாவது பாட்டில் முதல் வித்தை என்ற ஒன்றை எடுத்துக்காட்டி முதல்வித்தை உலகில் ஓங்கிச் சிறப்புற்று விளங்கவேண்டும் எனவும் வாழ்த்து அமைத்துக் கூறுவதாக அப்பகுதி அமைகிறது . சிவதத்துவ விவேகத்துள் சிவஞானசுவாமிகள் ஆறாவது பாட லிற்குறிப்பிட்டுக் காட்டும் முதல்வித்தை பற்றிய ஆய்வினைத் தன்னகத்துக் கொண்டு விளங்குவதே இப்பகுதி . வித்தை என்பதன் பொருள் வித்தை என்ற சொல் பொதுவாக ஞானம் என்பதைக் குறிக்கும் . பரஞானம் அபரஞானம் என்பனவும் பரவித்தை அபர வித்தை எனக் குறிக்கப்பெறும் வழக்குண்மையைக் காணலாம் . வித்தை என்பதை ஞானம் பெறுவதற்குரிய வழி என்ற வகை யிலும் எடுத்தாளும் நிலை உண்டு . வகரவித்தை எனவும் தகர வித்தை எனவும் வழங்குப . வகரத்தால் முடிக்கும் ஞானம் என்றும்