சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

6. சுத்தாத்வைதம் முன்னுரை 'பொருள்' பற்றிய கொள்கையை வரையறை செய்தமைத்தல் என்பதே மெய்யுணர்வுத் துறையின் பணி. பொருள்பற்றிய செய்தி களை ஆய்ந்தும், தன்மைகளைத் துய்த்தும் வரையறை செய்வது அறிவு. பொருள்பற்றிய வரையறையை உணர்த்தும் முறை இரண்டு. கொள்கையின் அடிப்படையில் உணர்த்துவது ஒரு முறை; அடைந்து அனுபவித்தல் என்பதன் அடிப்படையில் உணர்த்துவது இரண் டாவது முறை. முன்னதைத் தத்துவம் என்றும், பின்னதைச் சமயம் என்றும் குறிப்பிடும் வழக்கு உண்டு. சைவம் என்பது சமயஞ் சார்ந்த பெயர் எனவும், சித்தாந்தம் என்பதை அறிவாராய்ச்சியியற் கொள்கையின் அடிப்படையில் அதற்கு வழங்கும் பெயர் எனவும் கொள்வது பெயர்கள் வெற்று இடு குறிகளல்ல, அவையும் பொருட் பொதிவுடன் இணைக்கப் பெற்றவைகளே என்ற அடிப்படையில் உணர்ந்துகொள்வதாகும். வேதாந்தம் எனப்பெறும் உபநிடத வழியினும், பிரமசூத்திரம் என்ற நூலுக்கு எழுந்த உரைகளின் வழியிலும் ·எழுந்த மெய்ப் பொருட் கொள்கைகளை ‘அத்துவிதம்' என்ற சொல்லோடு இணைத்துக் காட்டும் வழக்கு மலர்ந்தது. கேவலாத்வைதம், விசிட்டாத்வைதம், துவைதாத்வைதம், சிவாத்வைதம் என்ற பெயர்கள் மெய்ப்பொருட் கொள்கைகளைக் சை-5
6. சுத்தாத்வைதம் முன்னுரை ' பொருள் ' பற்றிய கொள்கையை வரையறை செய்தமைத்தல் என்பதே மெய்யுணர்வுத் துறையின் பணி . பொருள்பற்றிய செய்தி களை ஆய்ந்தும் தன்மைகளைத் துய்த்தும் வரையறை செய்வது அறிவு . பொருள்பற்றிய வரையறையை உணர்த்தும் முறை இரண்டு . கொள்கையின் அடிப்படையில் உணர்த்துவது ஒரு முறை ; அடைந்து அனுபவித்தல் என்பதன் அடிப்படையில் உணர்த்துவது இரண் டாவது முறை . முன்னதைத் தத்துவம் என்றும் பின்னதைச் சமயம் என்றும் குறிப்பிடும் வழக்கு உண்டு . சைவம் என்பது சமயஞ் சார்ந்த பெயர் எனவும் சித்தாந்தம் என்பதை அறிவாராய்ச்சியியற் கொள்கையின் அடிப்படையில் அதற்கு வழங்கும் பெயர் எனவும் கொள்வது பெயர்கள் வெற்று இடு குறிகளல்ல அவையும் பொருட் பொதிவுடன் இணைக்கப் பெற்றவைகளே என்ற அடிப்படையில் உணர்ந்துகொள்வதாகும் . வேதாந்தம் எனப்பெறும் உபநிடத வழியினும் பிரமசூத்திரம் என்ற நூலுக்கு எழுந்த உரைகளின் வழியிலும் · எழுந்த மெய்ப் பொருட் கொள்கைகளை அத்துவிதம் ' என்ற சொல்லோடு இணைத்துக் காட்டும் வழக்கு மலர்ந்தது . கேவலாத்வைதம் விசிட்டாத்வைதம் துவைதாத்வைதம் சிவாத்வைதம் என்ற பெயர்கள் மெய்ப்பொருட் கொள்கைகளைக் சை -5