சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

சுத்தாத்வைதம் உண்மை விளக்கம் 61 திருவதிகை மனவாசகம் கடந்தார் மெய்கண்டாரின் நேர் மாணாக்கர். அவர் அருளிய உண்மை விளக்கம் என்ற நூலில் அத்துவிதமுத்தி என்ற தலைப்பில் ஆறு வெண்பாக்கள் அமைக்கப் பெற்றுள்ளன. பொது மெய்கண்ட சாத்திர நூல்களில் முத்திநிலை பற்றிப் பேசும் இடங்களில் ஆன்மாவும் இறைவனும் நிற்கும் நிலைபற்றிய விளக்கம் அமையும் போதெல்லாம் இத்தகைய குறிப்பின் அடிப் படையிலேயே விளக்கம் அமைக்கப் பெறுவது பொதுவாகக் காணப் பெறும் குறிப்பு. 'அத்துவிதம்' என்ற சொல் எழுப்பிய மயக்கத்தில் தெளியாது தத்துவவாதிகள் மயங்கிக் கிடந்த காலத்து, அம்மயக்கத்தைத் தெளிவாக்க எழுந்ததே சிவஞானபோதம் என்ற வழக்காறு உண்மையின், 'அத்துவிதம்' என்ற சொல்லின் அடிப்படையில் எழும் பொருள் முறைகளை வரையறை செய்தமைத்த பெருமை சிவஞானபோதத்துக்கு உண்டு எனத் தெளிதலின், சித்தாந்த சைவம், அத்வைதம் என்ற சொல்லின் அடிப்படையிலும் விளக்கம் செய்து அமைத்துக் காட்ட வேண்டிய இன்றியமையாமைப் பணியில் உள்ளது என்பது உணரத் தகுவதொன்றாம். சிவஞானபோதச் செம்பொருள் நெறியை அத்துவிதம் என்ற சொல்லின் அடிப்படையில் வைத்துப் பொருள் விளக்குதல் தேவை யான பணியே என்பதை மாதவச் சிவஞான சுவாமிகள் கருதி, அப்பணிக்கு ஏற்றவகையில் இயைபு கிடைத்த இடங்களிலெல்லாம் ஏற்ற பெற்றி எழுதி விளக்கியுள்ளாராதலின், அவர்தம் உரையின் வழிநின்று விளக்கமுறுத்துதல், அவர் நோக்கில் சைவசித்தாந்தம் என்ற இத்தலைப்புக்கும் ஏற்ற ஒன்றே. குறையே இந்நாளில் சித்தாந்த சைவம் பற்றி எழுத முற்படுகின்ற சான்றோர்கள் 'அத்வைதம்' என்ற சொல்லமைப்பில் எடுத்து விளக்கும் முறையைப் பெரிதும் புறக்கணித்தல் ஒரு வகைக் குறையே. அக்குறையை மனத்துட் கொண்டே ஒரு தனித் தலைப் பும் அதை ஒட்டிய ஆய்வும் இங்கே இடம் பெறலாயின.
சுத்தாத்வைதம் உண்மை விளக்கம் 61 திருவதிகை மனவாசகம் கடந்தார் மெய்கண்டாரின் நேர் மாணாக்கர் . அவர் அருளிய உண்மை விளக்கம் என்ற நூலில் அத்துவிதமுத்தி என்ற தலைப்பில் ஆறு வெண்பாக்கள் அமைக்கப் பெற்றுள்ளன . பொது மெய்கண்ட சாத்திர நூல்களில் முத்திநிலை பற்றிப் பேசும் இடங்களில் ஆன்மாவும் இறைவனும் நிற்கும் நிலைபற்றிய விளக்கம் அமையும் போதெல்லாம் இத்தகைய குறிப்பின் அடிப் படையிலேயே விளக்கம் அமைக்கப் பெறுவது பொதுவாகக் காணப் பெறும் குறிப்பு . ' அத்துவிதம் ' என்ற சொல் எழுப்பிய மயக்கத்தில் தெளியாது தத்துவவாதிகள் மயங்கிக் கிடந்த காலத்து அம்மயக்கத்தைத் தெளிவாக்க எழுந்ததே சிவஞானபோதம் என்ற வழக்காறு உண்மையின் ' அத்துவிதம் ' என்ற சொல்லின் அடிப்படையில் எழும் பொருள் முறைகளை வரையறை செய்தமைத்த பெருமை சிவஞானபோதத்துக்கு உண்டு எனத் தெளிதலின் சித்தாந்த சைவம் அத்வைதம் என்ற சொல்லின் அடிப்படையிலும் விளக்கம் செய்து அமைத்துக் காட்ட வேண்டிய இன்றியமையாமைப் பணியில் உள்ளது என்பது உணரத் தகுவதொன்றாம் . சிவஞானபோதச் செம்பொருள் நெறியை அத்துவிதம் என்ற சொல்லின் அடிப்படையில் வைத்துப் பொருள் விளக்குதல் தேவை யான பணியே என்பதை மாதவச் சிவஞான சுவாமிகள் கருதி அப்பணிக்கு ஏற்றவகையில் இயைபு கிடைத்த இடங்களிலெல்லாம் ஏற்ற பெற்றி எழுதி விளக்கியுள்ளாராதலின் அவர்தம் உரையின் வழிநின்று விளக்கமுறுத்துதல் அவர் நோக்கில் சைவசித்தாந்தம் என்ற இத்தலைப்புக்கும் ஏற்ற ஒன்றே . குறையே இந்நாளில் சித்தாந்த சைவம் பற்றி எழுத முற்படுகின்ற சான்றோர்கள் ' அத்வைதம் ' என்ற சொல்லமைப்பில் எடுத்து விளக்கும் முறையைப் பெரிதும் புறக்கணித்தல் ஒரு வகைக் குறையே . அக்குறையை மனத்துட் கொண்டே ஒரு தனித் தலைப் பும் அதை ஒட்டிய ஆய்வும் இங்கே இடம் பெறலாயின .