சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

சிவஞான முனிவர் நோக்கில் சைவசித்தாந்தம் அத்வைதம் என்ற சொல்லின் தோற்றம் சாந்தோக்ய உபநிடதத்தில், ஆறாம் அத்தியாயத்தில் ஒரு கதை வருகிறது. உத்தாலகன் என்பான் தன்மகன் சுவே த கேதுவை வேதம் படிக்க அனுப்பினான். பன்னிரண்டு வயதில் சென்ற சுவேதகேது இருபத்து நான்காவது வயதில் வேதங்களை உணர்ந்து திரும்பினான். உத்தாலகன் தன் மகனைப் பார்த்து “எந்த ஒரு கல்வியால் கேட்கப்படாதது கேட்கப் பட்டதாக ஆகுமோ, நினைக்காதது நினைக்கப்பட்டதாக அமையுமோ, அறியாதது அறியப்பட்டதாக அமையுமோ அதனை உன் ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டாயோ?" என்று கேட்டான். சுவேதகேது தனக்கு அவ்வாறு ஒன்றும் தெரியவில்லை என்கிறான். 68 "குழந்தாய், எந்த ஒரு மண் கட்டியினால் மண்ணாலாகிய அனைத்தும் அறியப்பட்டதாகுமோ, வேறு வடிவு வேற்றுமை முதலியனவெல்லாம் அழிந்துபோக, மண் ஒன்றே உண்மையோ, அங்ஙனம்," என விளக்கினான் தந்தை. இவ்வாறு தனக்கு உபதேசிக்கவில்லை என்றும், தாங்களே இதை உபதேசிக்க வேண்டும் என்றும் சுவேதகேது தன் தந்தை யாகிய உத்தாலகனையே கேட்டுக்கொள்கிறான். உத்தாலகன் சுவேதகேதுவை நோக்கி, குழந்தாய் படைப்புக்கு முன் இவ்வுலகு ஒன்றேயாக, சத்தாக, அத்வதீயமாக இருந்தது என்று பாடத்தைத் தொடங்குகிறான். இங்கு வரும் வாக்கியமே ‘"ஏகம் ஏவ அத்விதீயம்” என்பது. படைப்புக்குமுன் சத்து என்பது ஒன்றாக அத்விதீயமாக இருந்தது என்பதே அதன் விளக்கம். சத்தானது ஒன்றாக இருதிறன் இல்லதாக இருந்தது என்பதே நேர்ப்பொருள். ஆனால், இதனை ஒன்றே இரண்டற்றதாக இருந்தது என மொழிபெயர்க்கின்றார்கள். சத் என நின்றது ஒன்று; அது இரண்டற்றது என விளக்கம் அமைக்கும்போது, ஒன்று என்று சொன்ன பிறகு இரண்டற்றது என்று சொல்லுவானேன் என்பதே முதலில் தோன்றும் வினா. இதனை, சங்கரர், இராமானுசர், மத்வர் மற்றும் பலர் தத்தம் கொள்கை அடிப்படையில் விளக்கம் செய்ய முற்பட்டார்கள். எல்லா உரையாசிரியர்களும் ஏகம் என நின்றது எதுவோ அதுவே அத்வை தம் என்ற சொல்லாலும் விளக்கப் பெறுவதாகக்
சிவஞான முனிவர் நோக்கில் சைவசித்தாந்தம் அத்வைதம் என்ற சொல்லின் தோற்றம் சாந்தோக்ய உபநிடதத்தில் ஆறாம் அத்தியாயத்தில் ஒரு கதை வருகிறது . உத்தாலகன் என்பான் தன்மகன் சுவே கேதுவை வேதம் படிக்க அனுப்பினான் . பன்னிரண்டு வயதில் சென்ற சுவேதகேது இருபத்து நான்காவது வயதில் வேதங்களை உணர்ந்து திரும்பினான் . உத்தாலகன் தன் மகனைப் பார்த்து எந்த ஒரு கல்வியால் கேட்கப்படாதது கேட்கப் பட்டதாக ஆகுமோ நினைக்காதது நினைக்கப்பட்டதாக அமையுமோ அறியாதது அறியப்பட்டதாக அமையுமோ அதனை உன் ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டாயோ ? என்று கேட்டான் . சுவேதகேது தனக்கு அவ்வாறு ஒன்றும் தெரியவில்லை என்கிறான் . 68 குழந்தாய் எந்த ஒரு மண் கட்டியினால் மண்ணாலாகிய அனைத்தும் அறியப்பட்டதாகுமோ வேறு வடிவு வேற்றுமை முதலியனவெல்லாம் அழிந்துபோக மண் ஒன்றே உண்மையோ அங்ஙனம் என விளக்கினான் தந்தை . இவ்வாறு தனக்கு உபதேசிக்கவில்லை என்றும் தாங்களே இதை உபதேசிக்க வேண்டும் என்றும் சுவேதகேது தன் தந்தை யாகிய உத்தாலகனையே கேட்டுக்கொள்கிறான் . உத்தாலகன் சுவேதகேதுவை நோக்கி குழந்தாய் படைப்புக்கு முன் இவ்வுலகு ஒன்றேயாக சத்தாக அத்வதீயமாக இருந்தது என்று பாடத்தைத் தொடங்குகிறான் . இங்கு வரும் வாக்கியமே ஏகம் ஏவ அத்விதீயம் என்பது . படைப்புக்குமுன் சத்து என்பது ஒன்றாக அத்விதீயமாக இருந்தது என்பதே அதன் விளக்கம் . சத்தானது ஒன்றாக இருதிறன் இல்லதாக இருந்தது என்பதே நேர்ப்பொருள் . ஆனால் இதனை ஒன்றே இரண்டற்றதாக இருந்தது என மொழிபெயர்க்கின்றார்கள் . சத் என நின்றது ஒன்று ; அது இரண்டற்றது என விளக்கம் அமைக்கும்போது ஒன்று என்று சொன்ன பிறகு இரண்டற்றது என்று சொல்லுவானேன் என்பதே முதலில் தோன்றும் வினா . இதனை சங்கரர் இராமானுசர் மத்வர் மற்றும் பலர் தத்தம் கொள்கை அடிப்படையில் விளக்கம் செய்ய முற்பட்டார்கள் . எல்லா உரையாசிரியர்களும் ஏகம் என நின்றது எதுவோ அதுவே அத்வை தம் என்ற சொல்லாலும் விளக்கப் பெறுவதாகக்