சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

சுத்தாத்வைதம் ‘அத்துவிதம்’ என்ற சொல்லை அ+துவிதம் எனப் பிரித்து, முன்னின்ற ‘அ’ என்பதற்கு இன்மை, மாறுகோள், அன்மை என மூன்று நிலையிற் பொருள் கொள்வது வடமொழி இலக்கண வழக்கு. அவற்றுள் ‘அ’ என்பதற்கு ‘இல்லை' என்ற பொருளின் அடிப்படையில் இரண்டில்லை, ஒன்று எனக் கொண்டு விளக்கங் கூறியவர்களே சங்கரரும், இராமாநுசரும், நீலகண்டரும். 71 மத்வாசாரியார் முரண் என்ற பொருள் கொண்டு துவைதாத் வைதம் அமைத்தார். அவ்வகையில், அ+துவிதம் என்பதற்கு இரண்டன் மறுதலையாகிய ஒன்று எனப் பொருள் கொண்டு அந்த ஒன்றன் மறுதலையாகிய இரண்டாவதும் உண்டு எனக் கொண்டு, அத்துவிதம் என்பதற்குத் துவிதம் என்பதே பொருள் எனக் கொள்வர். இன்மை பற்றியும் மறுதலைபற்றியும் பொருள் கொண்டோர் எடுத்துக் கூறும் விளக்கம் இவ்வாறாக, மெய்கண்டார் அன்மைப் பொருள் கொள்ளுகின்றார். அன்மைப்பொருள் கொள்ளும் வகையில் சித்தாந்த சைவம் எத்தகையதொரு பெயரை அமைத்துக் கொள்ளுகிறது என்று அமைத்துக் காட்டவேண்டிய பணி உண்டு. “ஒன்று என்றது ஒன்றே காண் ஒன்றே பதி பசுவாம் ஒன்று என்றநீ பாசத்தோடு உளை காண்-ஒன்று இன்றால் அக்கரங்கள் இன்றாம் அகர உயிர் இன்றேல் இக்கிரமத்து என்னும் இருக்கு' என்ற வெண்பாவின், முதலிரண்டு வரிகள் இம்மறைப் பொருளை நேர்நின்று விளக்குவதாகக் கொள்ளலாம். 'ஏகம்' என நின்ற ஒரு நிலைக்கே முதல் இரண்டு வரிப்பொருளும் அமைந்து விடுகிறது; ஒன்று என்று சொன்னது ஒன்று. ஒன்று என நின்றது பதியே; ஒன்று என்று சொன்ன ஒன்று இருக்கிறதே அது பசு. அது பாசத்தோடு உளதாக இருப்பது என்பதே மெய்கண்டார் தரும் விளக்கம். ஒன்று என்று கூறியதோடு அமையாது அத்வைதம் "எனவும் கூறியதால், அத்துவிதம் என்பது முதல்வன் உயிர்களினின்றும் வேற்றுமையின்றி நிற்பன் என்ற பொருளில் வருகிறது என்பது ஒன்று என்பதையும் அத்வைதம் என்பதையும் இணைத்த நிலையில்
சுத்தாத்வைதம் அத்துவிதம் என்ற சொல்லை + துவிதம் எனப் பிரித்து முன்னின்ற என்பதற்கு இன்மை மாறுகோள் அன்மை என மூன்று நிலையிற் பொருள் கொள்வது வடமொழி இலக்கண வழக்கு . அவற்றுள் என்பதற்கு இல்லை ' என்ற பொருளின் அடிப்படையில் இரண்டில்லை ஒன்று எனக் கொண்டு விளக்கங் கூறியவர்களே சங்கரரும் இராமாநுசரும் நீலகண்டரும் . 71 மத்வாசாரியார் முரண் என்ற பொருள் கொண்டு துவைதாத் வைதம் அமைத்தார் . அவ்வகையில் + துவிதம் என்பதற்கு இரண்டன் மறுதலையாகிய ஒன்று எனப் பொருள் கொண்டு அந்த ஒன்றன் மறுதலையாகிய இரண்டாவதும் உண்டு எனக் கொண்டு அத்துவிதம் என்பதற்குத் துவிதம் என்பதே பொருள் எனக் கொள்வர் . இன்மை பற்றியும் மறுதலைபற்றியும் பொருள் கொண்டோர் எடுத்துக் கூறும் விளக்கம் இவ்வாறாக மெய்கண்டார் அன்மைப் பொருள் கொள்ளுகின்றார் . அன்மைப்பொருள் கொள்ளும் வகையில் சித்தாந்த சைவம் எத்தகையதொரு பெயரை அமைத்துக் கொள்ளுகிறது என்று அமைத்துக் காட்டவேண்டிய பணி உண்டு . ஒன்று என்றது ஒன்றே காண் ஒன்றே பதி பசுவாம் ஒன்று என்றநீ பாசத்தோடு உளை காண் - ஒன்று இன்றால் அக்கரங்கள் இன்றாம் அகர உயிர் இன்றேல் இக்கிரமத்து என்னும் இருக்கு ' என்ற வெண்பாவின் முதலிரண்டு வரிகள் இம்மறைப் பொருளை நேர்நின்று விளக்குவதாகக் கொள்ளலாம் . ' ஏகம் ' என நின்ற ஒரு நிலைக்கே முதல் இரண்டு வரிப்பொருளும் அமைந்து விடுகிறது ; ஒன்று என்று சொன்னது ஒன்று . ஒன்று என நின்றது பதியே ; ஒன்று என்று சொன்ன ஒன்று இருக்கிறதே அது பசு . அது பாசத்தோடு உளதாக இருப்பது என்பதே மெய்கண்டார் தரும் விளக்கம் . ஒன்று என்று கூறியதோடு அமையாது அத்வைதம் எனவும் கூறியதால் அத்துவிதம் என்பது முதல்வன் உயிர்களினின்றும் வேற்றுமையின்றி நிற்பன் என்ற பொருளில் வருகிறது என்பது ஒன்று என்பதையும் அத்வைதம் என்பதையும் இணைத்த நிலையில்