சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

சிவஞான முனிவர் நோக்கில் சைவசித்தாந்தம் பூரணமாகப் பெற்று நிற்றல் என்பதே 'சிவயோகம்' என்ற அனுபவநிலை. 80 ஆன்ம உணர்வு திருவருளோடு பிரிப்பின்றி ஒன்றி, அதன் வயப்பட்டு நிற்றலின் அங்ஙனம் தன்னைத் தன்வயப்படுத்தித் தானேயாய் நிற்றல் முதல்வன் இயல்பு என்பது உணரப் பெறும். இவ்வுணர்வே சுத்தாத்துவித நிலை உணர்வு என்றும் நின்மல துரியம் எனவும் அருள்நிலை எனவும் சிவயோகம் எனவும் கூறப் பெறும். இந்நிலை அனுபவம் இவ்வுலகில் இங்கேயே, இவ்வுடம்பி லேயே உணர்ந்து அனுபவித் தறியப் பெறும் நிலை எனவும் கொள்ள வேண்டும். ''அறிவொளிபோற் பிறிவரும் அத்துவிதம்’’ என்பதன் அனுபவநிலையை உணரும் அதீதநிலையியல்பு எனவும் விளக்கிக் காட்டினார். சித்தாந்த சைவநெறியைச் சிவஞானபோதம் பத்தாம் நூற்பா "அவனே தானே ஆகிய அந்நெறி' என விளக்கம் செய்து முடித்து நின்றபின், அந்நெறி சார் அனுபவ நிலைகளை முறையே விளக்கும் வகையில் பதினொன்றாம் நூற்பா வானது சுத்தாத்து வித நிலை அனுபவத்தையும் சிவானுபவத்தை யும் இரண்டு அதிகரணங்களால் விளக்கி முடித்து நின்றது. வானது. இனி, இந்நிலையைத் தன்கண் அமைத்து நின்ற நிலைபற்றி விளக்கினாலும், தன்கண் காணும் சுத்தாத்துவித நிலையைப் புறத்தே காட்டி, அந்நிலையை அன்பால் தொழுக என எடுத்துக் கூறும் முறையில் பன்னிரண்டாம் நூற்பாவின் நான்காம் அதி கரணத்தை அமைத்துக் காட்டுகின்றார். "முதல்வன் சடசித்துக்கண் மாட்டு நிற்கும் நிலைமை அறியப் பெற்றார்க்குக் கண் அருக்கன் போல அது இது எனப் பிரித்து இசைத்து ஓதப்படுவதாய பேத நிலைமையனும் அல்லனாய், உடல் உயிர் போல அதுவே என்று ஓதப்படுவதாய அபேத நிலைமையனும் அல்லனாய், குண குணி போல அதுவாகிய இது என்று பக்கிசையாமல் ஓதப்படுவதாய பேதாபேத நிலைமையனும் அல்லனாய் அம் மூன்றற்கும் பொதுமையான் அறிவொளி போல் அத்துவிதமாய் நிற்கும் முறையால் சடசித்துப் பொருள் யாவும் அவன் வடிவேயாம் என்றஉணர்வை நேர்நின்று கண்டு தெளியவும்,.
சிவஞான முனிவர் நோக்கில் சைவசித்தாந்தம் பூரணமாகப் பெற்று நிற்றல் என்பதே ' சிவயோகம் ' என்ற அனுபவநிலை . 80 ஆன்ம உணர்வு திருவருளோடு பிரிப்பின்றி ஒன்றி அதன் வயப்பட்டு நிற்றலின் அங்ஙனம் தன்னைத் தன்வயப்படுத்தித் தானேயாய் நிற்றல் முதல்வன் இயல்பு என்பது உணரப் பெறும் . இவ்வுணர்வே சுத்தாத்துவித நிலை உணர்வு என்றும் நின்மல துரியம் எனவும் அருள்நிலை எனவும் சிவயோகம் எனவும் கூறப் பெறும் . இந்நிலை அனுபவம் இவ்வுலகில் இங்கேயே இவ்வுடம்பி லேயே உணர்ந்து அனுபவித் தறியப் பெறும் நிலை எனவும் கொள்ள வேண்டும் . ' ' அறிவொளிபோற் பிறிவரும் அத்துவிதம் என்பதன் அனுபவநிலையை உணரும் அதீதநிலையியல்பு எனவும் விளக்கிக் காட்டினார் . சித்தாந்த சைவநெறியைச் சிவஞானபோதம் பத்தாம் நூற்பா அவனே தானே ஆகிய அந்நெறி ' என விளக்கம் செய்து முடித்து நின்றபின் அந்நெறி சார் அனுபவ நிலைகளை முறையே விளக்கும் வகையில் பதினொன்றாம் நூற்பா வானது சுத்தாத்து வித நிலை அனுபவத்தையும் சிவானுபவத்தை யும் இரண்டு அதிகரணங்களால் விளக்கி முடித்து நின்றது . வானது . இனி இந்நிலையைத் தன்கண் அமைத்து நின்ற நிலைபற்றி விளக்கினாலும் தன்கண் காணும் சுத்தாத்துவித நிலையைப் புறத்தே காட்டி அந்நிலையை அன்பால் தொழுக என எடுத்துக் கூறும் முறையில் பன்னிரண்டாம் நூற்பாவின் நான்காம் அதி கரணத்தை அமைத்துக் காட்டுகின்றார் . முதல்வன் சடசித்துக்கண் மாட்டு நிற்கும் நிலைமை அறியப் பெற்றார்க்குக் கண் அருக்கன் போல அது இது எனப் பிரித்து இசைத்து ஓதப்படுவதாய பேத நிலைமையனும் அல்லனாய் உடல் உயிர் போல அதுவே என்று ஓதப்படுவதாய அபேத நிலைமையனும் அல்லனாய் குண குணி போல அதுவாகிய இது என்று பக்கிசையாமல் ஓதப்படுவதாய பேதாபேத நிலைமையனும் அல்லனாய் அம் மூன்றற்கும் பொதுமையான் அறிவொளி போல் அத்துவிதமாய் நிற்கும் முறையால் சடசித்துப் பொருள் யாவும் அவன் வடிவேயாம் என்றஉணர்வை நேர்நின்று கண்டு தெளியவும்
Warning: A non-numeric value encountered in /var/www/thedal/view.php on line 116

Warning: A non-numeric value encountered in /var/www/thedal/view.php on line 117

Warning: A non-numeric value encountered in /var/www/thedal/view.php on line 118